All publications of Chinraj . चेन्नई , भारत
பூமியில் ஏற்பட நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் ! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!
கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுதும் பல நாடுகளில் நீண்டகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதர்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்துள்ளனர், உலகளவில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன, குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது,
தற்பொழுது நம்பமுடியாத மிகப்பெரிய மற்றொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களின் அவசர வாழ்க்கை நேரம் காணாமல் போய்விட்டது. கொரோனா பாதிப்பிற்குப் பின்னால், உலகம் முழுதும் இப்பொழுது நிலையே மாறியுள்ளது, குறிப்பாக நகரங்களில் உள்ள மக்களின் நகர வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் உயிருக்கு பாதிப்பளிக்கும் கொடூரமான நோயாக இருந்தாலும், மற்றொரு புறம் கொரோனா உண்மையில் பூமிக்குப் பல நல்ல மாற்றங்களையே கொண்டுவந்துள்ளது என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.
சாத்தியமே இல்லை என்று நினைத்த பல காரியங்களை இந்த கொரோனா நிகழ்வு செய்து காட்டியுள்ளது. குறைந்த காற்று மாசு, குறைந்த கடல் மாசு, வெப்பநிலையில் மாற்றம் மற்றும் ஓசோன் படலத்திலிருந்த மாபெரும் ஓட்டை அடைந்தது என்று பல மாற்றங்கள் பூமியில் கடந்த சில வாரங்களில் நடந்தேறியுள்ளது. அந்த வரிசையில் விஞ்ஞானிகள் பூமியில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மற்றொரு மாற்றத்தை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடாத மாற்றமாக, இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் மனித நடமாட்டம் மற்றும் வாகன சலசலப்பு ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளது.
இந்த கடுமையான அதிர்வுகள் குறைந்ததால் பூமியின் அதிர்வுகள் ஒட்டுமொத்தமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பூமி குறைவாக நகர்த்துவதற்குக் காரணமாகி கிரகம் 'அசையாமல்' நிற்பது போன்று பதிவுகள் பதிவாகியுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள ராயல் அப்சர்வேட்டரியில் புவியியலாளரும் நிலநடுக்கவியலாளருமான தாமஸ் லெகோக் கூறுகையில், நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் பூட்டுதல் தொடங்கியதிலிருந்து, சுற்றுப்புற நில அதிர்வு சத்தத்தில் 30 முதல் 50 சதவிகிதம் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் அந்த பகுதியில் அதிர்வுகள் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நில அதிர்வு தரவுகள் மிகவும் துல்லியமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்சமொலொஜிஸ்ட்ஸ் (seismologists) என்று அழைக்கப்படும் நில அதிர்வு வல்லுநர்களால் சேகரிக்கப்பட்ட பூமியின் நில அதிர்வு தரவுகள், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சேகரித்துள்ள தகவல்கள் மிகவும் துல்லியமாகி வருகிறது, மிகச்சிறிய நடுக்கத்தைக் கூட இந்த கருவிகள் கண்டறியும் திறன் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பல அறிவியல் கருவிகள் நகர மையங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த தகவல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மேற்கு லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற போக்கைக் கண்டறிந்துள்ளனர். இதேபோல் பூமியில் உள்ள பல இடங்களில் இதுவரை நிலவி வந்த நில அதிர்வுகள் முற்றிலுமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மனிதர்கள் அதிகம் புழக்கத்திலிருந்த இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மனித நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள தொலைதூர நிலையங்களில் எடுக்கப்பட்ட தரவுகள் எப்பொழுதும் போல இயல்பாகவே இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இயற்கை இடங்களில் நில அதிர்வுகள் அதிகமில்லை என்கிறது இவர்களின் தரவு.
ஒரு புறம் கொரோனா தோற்று மனிதர்களின் உயிரை வேட்டையாடி வருகிறது. ஆனால், மறுபுறம் இதுவரை சாத்தியமே இல்லை என்று நினைத்த நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது. உலகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், ஒட்டுமொத்த வாகனங்கள் என அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பூமிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மே தினம் உழைப்பவா் சீதனம்
ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில்துறை தொழிலாளர்கள் தலைமையிலான புரட்சியைக் குறிக்கும் நாள் இது.
அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு சிறந்த வேலைச் சூழலுக்கான கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தி, அந்த போராட்டத்தில் வெற்றியும் கண்டனர்.
அந்த காலகட்டத்தில், தொழிலாளர்கள் 12 முதல் 15 மணி நேரம் வேலை செய்யும்படி கட்டாயபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்கக் கோரினர்.
உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். பாட்டாளி வர்க்கத்தின் தியாகத்தையும், வலிமையையும் இந்த மே தினத்தில் நாம் அனைவரும் நினைவுகூறுவோம்.
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தினத்தன்று நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.
தொழிலாளர் தினம் என்பது அனைத்து தொழிலாளர்களையும் கவுரவிப்பதற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறது. அனைத்து உழைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
தொழிலாளர் தினம் சராசரி மனிதனுக்கு பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான நமது உறுதியைக் குறிக்கிறது. இது அவர்களுக்கு அரசியல் சுதந்திரத்தை அளிக்கும். அவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களிக்க கடினமாக உழைக்கும் உழைப்பாளர்கள் அனைவரையும் கவுரவிக்கும் ஒரு சிறப்பு நாள் இது. அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!
உழைக்கும் தோழா்களே ஒன்று சேருங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்,,,,,,