All publications of Raj Ram . मदुरई , भारत
அதிசயம் நடைபெறும் என ரஜினி தெரிவித்திருந்த கருத்துக்கு திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கிண்டல் தொணியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் ரஜினியை தனிப்பட்டமுறையில் கிண்டல் செய்யும் வகையில் பேசி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவதாக பல ஆண்டுகளாக கூறி வருவதாகவும், ஆனால் ரஜினி அரசியலுக்கு வர பயம் என்றும் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, திமுக தலைவர்களை விட காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் சேர்ந்து அதிசயம் என்ற பெயரில் திரைப்படம் வேண்டுமானால் எடுக்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.
டிடிவி தினகரன் மட்டுமே ரஜினியின் கருத்துக்கு லாவகமாக பதில் அளித்துள்ளார். ரஜினி தமிழ்நாட்டில் அதிசயம் நடக்கும் என்று கூறியிருப்பது ஆட்சிமாற்றத்தை குறித்து கூறியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இல்லாத ஒரு ஆட்சி அமையும் என்பதை ரஜினி கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. ஆனால் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை அளவை விட தமிழ்நாட்டுக்கு குறைந்த அளவே மழை கிடைத்துள்ளது. ஆயினும் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு தேவைக்கதிகமான மழை கிடைத்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவதற்கு முன்பாக தமிழ் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் வானிலை ஆய்வு அமைப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. மேகங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த சில வாரங்களுக்கு நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. லேசானது முதல் மிதமான வரை தொடர் மழை பெய்யும் காரணமாக, சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நீர் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே, இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு சிறப்பான மழைப்பொழிவு அமைந்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் திமுக முகமாக பார்க்கப்படுபவர் ஐ பெரியசாமி. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ஐ பெரியசாமி, திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ பெரியசாமி, திமுக உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும், தேர்தலை கண்டு திமுக பயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து திமுக போராடி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக தள்ளி போட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தலை கண்டு பயம் இல்லாதவர்கள் ஏன் தேர்தலை தள்ளி வைத்தார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மறைமுக தேர்தலோ நேரடி தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று எளிதாக தூத்துக்குடி மாநகராட்சி கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
மறைமுகத் தேர்தலை திமுக எதிர்க்கவில்லை எனவும், முதலில் நேர்முக தேர்தல் என்று அறிவித்துவிட்டு, ஒரு சில நாட்களிலேயே மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்க காரணம் என்ன என்றுதான் திமுக கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன. மேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கன்னியாகுமரி தூத்துக்குடி திருவாரூர் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து வருகின்றன. அதேபோல் கன்னியாகுமரி தூத்துக்குடி நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூரில் கடந்த ஒரு வார காலமாக கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழை காரணமாக திருச்செந்தூர் பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்து பணிமனை ஆகியவற்றுக்கு வெள்ள நீர் புகுந்தது.
திருச்செந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து நீரை வெளியேற்றும் கால்வாய் நிரம்பிய காரணத்தால், திருச்செந்தூர் பேருந்து பணிமனையில் இருந்து நீரை வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாக திருச்செந்தூர் பேருந்து நிலையம், திருச்செந்தூர் பேருந்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியது இதையடுத்து. திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் சார்பில் ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நீர் வெளியேற்றுவதற்கான கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணிநேரம் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடந்த ஒரு வார காலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் ஏரிகள் கண்மாய்கள் என அனைத்து வகையான நீர் நிலைகளிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் பாய்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய நான்கு அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் நீரின் அளவு அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கடனாநதி அணை, குண்டாறு அணை, கருப்பாநதி அணை அடவிநயினார் அணை ஆகிய நான்கு அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இந்த நான்கு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், இந்த அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவுக்கேற்ப நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை, பாபநாசம் அணை, தென்காசி அணை, அம்பாசமுத்திரம் அணை உள்ளிட்ட அணைகளும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அணைகளும், குளங்களும் நிரம்பி வருவதால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக கருதப்படும் மதுரை மாநகராட்சியை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க திமுக மற்றும் அதிமுக தயாரா இல்லை. இவ்விரு கட்சிகளும் நேரடியாக மதுரை மாநகராட்சியில் களமிறங்கியுள்ளன. மறைமுக தேர்தல் முறை உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிக கவுன்சிலர்களை வைத்திருக்கும் கட்சியே மேயர் பதவியை பெற முடியும் என்பதால், திமுக மற்றும் அதிமுகவிடம் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றன.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மதுரை மாநகராட்சியில் 25 வார்டுகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஏறக்குறைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமமாக கருதப்படுகின்றன. சென்னை, மதுரை உள்ளிட்ட மிகப்பெரிய மாநகராட்சி கவுன்சிலர்கள் ஐந்து வருடங்களில் பல நூறு கோடிகளை சம்பாதித்து விடுகின்றனர். மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கமிஷன் வாங்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் குறுநில மன்னர்களைப் போல் செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக எப்படியாவது மாநகராட்சி வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று 5 ஆண்டுகளில் நிறைய சம்பாதித்து விடவேண்டும் என்று நோக்கி வார்டு கவுன்சிலர் பதவியில் பதிவைப் பெற போட்டி நடக்கின்றது. அந்த வகையில் மதுரை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் வார்டுகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளது. இதேபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் மதுரை மாநகராட்சியில் அதிக வார்டுகளை தங்களுக்கு ஒதுக்கும்படி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய நிதி கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி அவர்கள், காஷ்மீர் பிரச்சனையில் எவ்வளவோ முயற்சி செய்தும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதை தடை செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் இறங்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தி ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு, ஆனால் மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியையும் இதுவரை மத்திய அரசு ஒதுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதன்காரணமாக தேவையான நிதிகளை ஒதுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது திமுகவின் கொள்கை எனவும், எக்காரணம் கொண்டும் கொள்கையிலிருந்து திமுக பின்வாங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வேலையை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளையும் திரட்டி மாநில சுயாட்சிக்கான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநகராட்சியாக அறியப்படுவது மதுரை மாநகராட்சி. மதுரை மாநகராட்சியில் வெற்றி பெறும் கட்சி, ஒட்டுமொத்த தென் மாவட்டங்களிலும் செல்வாக்கு படைத்த கட்சியாக அறியப்படும் என்பதால், மதுரை மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக உள்ளன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மதுரை மாநகராட்சி வேறு எந்த ஒரு கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் மதுரை மாநகராட்சியை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் மதுரை மாநகராட்சியை குறிவைத்து அதிமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆயினும் மதுரை மாநகராட்சியை விட்டுக்கொடுக்க முடியாது என திட்டவட்டமாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இருக்கும் அதிமுகவினர் எப்படியும் மதுரை மாநகர மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமையிடம் சீட்டு வாங்கிய கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது தங்களுடைய பேச்சை கேட்டு நடக்கும் தங்களுடைய சிஷ்யர்களுக்கு இத் தொகுதியை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து காய் நகர்த்தி வருகின்றனர். மதுரை தொகுதியை கேட்டு பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இத்தொகுதியை மகளிருக்கான தொகுதியாக அறிவித்து விடலாம் என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டி குறையும் என அதிமுக எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், 5 மாவட்டங்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, இராமநாதபுரம் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதலே வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்னும் 2 நாட்களுக்கு நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேமுதிக, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் ஆளும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்பேச்சு வார்த்தையின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி பகுதிகளில் 20 சதவிகித உள்ளாட்சி பதவிகளை தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டுமெனவும், இருக்கும் 15 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சி தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் மதுரை மாநகராட்சியை கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு ஆளும் அதிமுக தரப்பில் ஒத்துக் கொள்ளவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருக்கும் 15 மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளில் தேமுதிகவுக்கு ஒதுக்குவது சாத்தியமில்லை எனவும், மதுரை மாநகராட்சி பாரம்பரியமாக அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருவதால் மதுரை மாநகராட்சியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
மேற்கு மண்டலத்தில் கோவை மற்றும் ஈரோடு மாநகராட்சி தேமுதிககேட்டதாகவும், ஆனால் அதற்கு பதிலாக திருப்பூர் மாநகராட்சி தேமுதிகவுக்கு விட்டுக் கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.