மூல வைகையில் வெள்ளப்பெருக்கு मदुरई
தமிழ்நாட்டில் பாயும் நதிகளில் வைகைக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள் பாயும் நதிகளுள் வைகை ஒரு சிறப்பு பெற்ற நதியாகும். இந்நதி மதுரையை பகுதியில் மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. வைகை நதி நாகரிகமான கீழடி நாகரிகம் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் திருவிளையாடல் புராணத்தில் வைகை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இன்றும் மதுரையின் கலாச்சார சின்னமாகவே வைகை பார்க்கப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் வைகை ஆறும் ஒரு அங்கம் வகிக்கிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு புகழ் பெற்றத.
இப்புகழ் பெற்ற வைகையின் பிறப்பிடமான மூல வைகை பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது, மதுரை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வைகை உற்பத்தியாகும் கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமலை வனப்பகுதி. மயிலம்பாடி. வருசநாடு. கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் கிராம பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து மழை பெய்தது.
இரவு முழுதும் தொடர்ந்த கனமழை காரணமாக, மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக வைகை நதியின் துணை ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மூல வைகையில் பொங்கி வரும் வெள்ள நீரை பார்த்து அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Other News by This Author
டாஸ்மாக் கடையை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட கரம்பக்குடி என்னும் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அதிக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில் ஒன்றாகும். திருமணஞ்சேரி விலக்கு சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். விற்பனையாளர்களாக வீராசாமி மற்றும் ராஜ்குமார் என்பவர்கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் கடையை பூட்டும் போது வசூலான தொகையை கடையில் வைக்காமல் வங்கியில் செலுத்துவதற்காக தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். கடையை பூட்டிவிட்டு சென்றவர்கள், காலை வந்து பார்த்தபோது கடை உடைக்கப்பட்டது தெரிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடையை உடைத்த திருடர்கள் கடைக்குள் இருந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையை காவல்துறையினர் மோப்பநாய் மூலம் கண்டுபிடிக்க கூடாது என்ற காரணத்தினால், கொள்ளையடித்த திருடர்கள் கடை சுற்றிலும் மிளகாய் தூளை தூவியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் மேற்பார்வையாளர் சிவகுமார். இதையடுத்து அப்பகுதியை ஆய்வுசெய்த கரம்பக்குடி காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன், துணை ஆய்வாளர் சரவணன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த மதுபான கொள்ளை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாராவது தென்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படியும், ஏதாவது ஒரு இடத்தில் குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து பிரிவில் ஆய்வாளராக இருந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் தன்னுடைய சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் என்னும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் அவருடைய மகளும் திருமணம் முடித்து சென்னையில் தன் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தன் மகன் மற்றும் மகளை பார்ப்பதற்காக ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சென்னையில் தங்கியிருந்த அவர்கள், ஊருக்கு திரும்பிய போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 27 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. மேலும் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு 5 ஆயிரம் ரொக்கப் பணம் என பல்வேறு பொருட்கள் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடப்பட்டுள்ளது. தன்னுடைய வீட்டில் நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பாலகிருஷ்ணன். இதையடுத்து சுசீந்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே கோட்டங்களில், தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தமிழ்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் சமீபத்தில் பணியிடங்கள் நிரப்பப் பட்ட போது, மிகப் பெரும்பான்மையான அளவில் வட இந்தியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பணிகளிலும் வட மாநிலத்தவர் அதிக அளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
300 பணிகள் காலியாக இருந்த நிலையில் ஏறக்குறைய 290 வடமாநிலத்தவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்த 10 நபர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடிய போராட்டக்காரர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் புலிகள் அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போராட்டக்குழுவினர், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று மதுரை ரயில்வே நிலையம் முன்பு போராட்ட போராட முடிவெடுத்து இருந்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினரின் தடுப்புகளை மீறி, மதுரை ரயில்வே நிலையத்துக்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை தமிழ்நாடுஅரசு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படும் பொழுது அம்மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது போன்ற காணொளிகள் ஏற்கனவே பலமுறை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு உள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டில் வடமாநில பணியாளர்களுக்கு பாதுகாப்பளித்து விட்டு, தமிழர்களை சிறையில் தள்ளுவதும் தமிழர்களை தாக்குவது என தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருவது வேதனையை தருவதாக உள்ளது.
Other News Madurai
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருந்த நிலையில், அவர் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது காவல்துறை. காவல்துறை தேடலை அடுத்து தலைமறைவான உதித், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதய் சூர்யாவை உடனடியாக சிபிசிஐடி போலீசில் சரண் அடையும்படியும், சரணடைந்த பிறகு முன்ஜாமின் மனு ஜாமீன் மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. தற்போது உதித் சூர்யா, சிபிசிஐடி போலீ சாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதித் சூர்யா சரணடைந்திருந்தால் முன்ஜாமின் மனுவை பரிசீலனை செய்யலாம், ஆனால் குற்றவாளி சரணடையவில்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். உதித் சூர்யாவின் வழக்கறிஞர் உதித் இளைஞர் என்றும் அவர் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனுவை ஜாமின் மனுவாக ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து வரும் 14ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் விவசாயம் செழிப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக ஆங்காங்கே சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அது வேறு எதுவுமில்லை மழை காலங்களில் ஏற்படும் கொசு பெருக்கம் மற்றும் கொசுவினால் ஏற்படும் வியாதிகளும்தான் அந்த விரும்பத்தகாத நிகழ்வுகள்.
மதுரை மாநகரில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரில் கொசு பெருக்கம் அதிகரித்ததால், அப்பகுதியில் டெங்கு மற்றும் மலேரியா நோய் அதிக அளவில் பரவி வருகிறது. சமீப நாட்களில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு சிகிச்சைக்கான தனியாக வார்டு ஒதுக்கப்பட்டு டெங்கு நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 50 படுக்கைகள் கொண்ட டெங்கு சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. படுக்கைகள், கொசு வலைகள் என பல்வேறு வசதிகள் டெங்கு வார்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் வரும் சாதாரண காய்ச்சலை, டெங்கு என நினைத்து பயப்பட வேண்டாம் எனவும், டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக சரிப்படுத்தி விடலாம் எனவும் மதுரை மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். வீடுகளைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும், நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான மூன்று யானைகள் இந்து, ஜெயந்தி, சந்தியா. இம்மூன்று யானைகளும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த யானைகளை பராமரித்து வந்த யானைப்பாகன் இறந்ததால், யானைகளை சரிவர பராமரிக்க முடியாமல் போனது. இதனால் யானைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திடம் யானைகளின் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி மரக்காணத்தில் ஒரு தோட்டத்தில் வைத்து மூன்று யானைகளும் பராமரிக்கப்பட்டன.
ஆனால் அந்தத் தொண்டு நிறுவனம் வனத்துறையின் முறையான அங்கீகாரத்தை பெறாத காரணத்தால், யானைகளை அந்த தொண்டு நிறுவனத்திடம் இருந்து மீட்டு அரசே பராமரிக்க வேண்டுமென காஞ்சிபுரம் பக்தர்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட மூன்று யானைகளும் திருச்சியில் உள்ள அரசு யானைகள் பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சந்தியா, இந்து, ஜெயந்தி ஆகிய மூன்று யானைகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் ஏற்கனவே மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு யாணையும் இருக்கும் நிலையில், தற்போது இந்த மூன்று யாணைகளும் அந்த நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தங்களின் சிறப்பு கவனிப்பால் யானைகள் புத்துணர்ச்சி அடைந்துள்ளதாகவும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் திருச்சி யாணைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Other News India
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சாணார் பாளையத்தில் திடீரென மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென மர்ம காய்ச்சலால் அப்பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னிமலை அரசு மருத்துவமனையில், மர்ம காய்ச்சலுக்கு என சிறப்பாக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் முடிந்து, கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான காய்ச்சல்கள் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சல்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. மதுரையில் ஏறக்குறைய 16 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு மற்றும் மலேரியா ஆகிய காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னிமலை பகுதியில் டெங்கு மலேரியா போன்ற எந்தவித அறிகுறியும் இல்லாமல் மர்ம காய்ச்சலால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மருத்துவர்கள் தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது என்ன விதமான காய்ச்சல் என்பது குறித்த ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
2015 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில், போலியான ஆவணங்களைக் கொடுத்து கைபேசி சிம்கார்டு வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட, கண்ணன், வீரமணி, ருபேஸ் ஆகியோர், விசாரணையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள் என தெரியவந்தது. அதன்பிறகு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கண்ணன் வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும், ரூபேஷ் கேரளா மாநிலத்தின் திருச்சூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கிய வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் கலந்துகொள்வதற்காக கண்ணன் வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் இருந்தும் ரூபேஸ் திருச்சூர் மத்திய சிறையில் இருந்தும் காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டனர். இம்மூவரும் ஈரோடு மாவட்ட நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவ் வழக்கை விசாரணை செய்த நீதிபதி வரும் 15-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதையடுத்து கண்ணன் வீரமணி ரூபேஷ் ஆகியோர் மீண்டும் காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரவர் சிறைக்கு செல்ல இருந்த நேரத்தில், இம்மூவரும் கீழடி ஆய்வு குறித்து கோஷம் எழுப்பியதால் ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ஏற்படுத்தப்பட்டது. கண்ணன், வீரமணி, ரூபேஸ் ஆகிய மூவரும் கீழடி ஆய்வை ஒழுங்காக நடத்து மத்திய அரசே என கோஷமிட்டனர். மேலும் தமிழின் பெருமையை மறைக்காதே தமிழின் தொன்மையை உலகுக்கு பெரியவை என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களை உற்றுநோக்க வைத்தது.
நதிநீர் விவகாரத்தில் தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வந்தபோதிலும், எப்போதும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை வஞ்சிக்கவில்லை என்பதே உண்மை. கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய உரிய நதிநீரை தராமல் மேற்கண்ட மாநிலங்களில் இழுத்தடித்து வருகின்றனர். மழை பெய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது என்ற முடிவில் இருந்து வருகிறது கர்நாடகா. அதேபோல் முல்லை பெரியாறு பிரச்சினையிலும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்து வருகிறது கேரளா. ஆனால் ஒப்புக்கொண்டபடி கேரளாவுக்கு தர வேண்டிய நீரை தொடர்ச்சியாக தந்து வருகிறது தமிழ்நாடு.
தமிழ்நாடு கேரளா ஒப்பந்தத்தின்படி மேல் நீரார் அணைக்கட்டில் இருந்து கேரளாவிற்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வால்பாறையில் அமைந்துள்ள மேல் நீரார் அணைக்கட்டு பகுதியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நீரார் அணைக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிகிறது. கேரள வனப்பகுதி செழிப்பாக இருப்பதற்கும், கேரள வனப்பகுதியில் விலங்குகளின் தண்ணீர் தேவைகளுக்கும் மேல் நீரார் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது என வால்பாறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்ச்சிதான் எனவும், ஒவ்வொரு ஆண்டும் மேல் நீர் அணைக்கட்டிலிருந்து கேரளாவுக்கு வழங்க வேண்டிய நீரை தமிழ்நாடு சரியான முறையில் வழங்கி வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Other world news
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருந்த நிலையில், அவர் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது காவல்துறை. காவல்துறை தேடலை அடுத்து தலைமறைவான உதித், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதய் சூர்யாவை உடனடியாக சிபிசிஐடி போலீசில் சரண் அடையும்படியும், சரணடைந்த பிறகு முன்ஜாமின் மனு ஜாமீன் மனுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. தற்போது உதித் சூர்யா, சிபிசிஐடி போலீ சாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதித் சூர்யா சரணடைந்திருந்தால் முன்ஜாமின் மனுவை பரிசீலனை செய்யலாம், ஆனால் குற்றவாளி சரணடையவில்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். உதித் சூர்யாவின் வழக்கறிஞர் உதித் இளைஞர் என்றும் அவர் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனுவை ஜாமின் மனுவாக ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து வரும் 14ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
The state government and the Prime Minister Daniel Andrews have given more than 31 mln dollars for the projects of fighting with drought in Victoria. Money will be spent on development of farm infrastructure, supporting farmers' health, business planning, and so on. The opposition has critisized the Minister's action and said, that should be more dams built. In return mr. Andrews says, that won't work and adds: 'Dams don't make it rain'. The program also includes some employment aims and money (about 5 million dollars) to create 120 new jobs. The country's Women's Association, the Victoria Farmers Federation and the Government of Victoria, are estimating farmers' rights to receive grants to work in difficult conditions.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சாணார் பாளையத்தில் திடீரென மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென மர்ம காய்ச்சலால் அப்பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னிமலை அரசு மருத்துவமனையில், மர்ம காய்ச்சலுக்கு என சிறப்பாக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் முடிந்து, கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான காய்ச்சல்கள் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சல்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. மதுரையில் ஏறக்குறைய 16 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு மற்றும் மலேரியா ஆகிய காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னிமலை பகுதியில் டெங்கு மலேரியா போன்ற எந்தவித அறிகுறியும் இல்லாமல் மர்ம காய்ச்சலால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மருத்துவர்கள் தொடர்ந்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது என்ன விதமான காய்ச்சல் என்பது குறித்த ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.